Published Date: April 28, 2025
CATEGORY: CONSTITUENCY

கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தி.மு.க சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களை தி.மு.க சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி கோடைகால நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மகப்பூபாளையத்தில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக கோடைகால நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டல தலைவர் பாண்டிசெல்வி, மாமன்ற உறுப்பினர் செல்வி செந்தில், முன்னாள் துணை மேயர் நிஷா பாண்டியன், பகுதி செயலாளர் பி.கே.செந்தில் உள்ளிட்ட திரளான தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Media: Dinakaran